தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், நவ.22: திருப்பூர், வஞ்சிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலம் முறையாக முடிக்கப்படாததினால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பூர் மாநகரப்பகுதியில் இருந்து கோவைக்கு கல்லூரி படிக்க செல்லும் மாணவர்கள், பல்வேறு பணிக்கு செல்பவர்கள் வஞ்சிப்பாளையம் வழியை பயன்படுத்தி தெக்கலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை வழியே விரைந்து செல்வது வழக்கம். அதன்படி, தினமும் ஆயிரக்கணக்கான இரு சக்கர மற்றும் நான்கு சக்கரம் சென்று வருகிறது. இந்நிலையில், வஞ்சிப்பாளையம் உயர்நிலைப்பள்ளிக்கு முன்பாக  கடந்த சில நாட்களுக்கு முன்பாக தரைப்பாலம் கட்டப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இத்தகைய பாலம் முறையாக சமப்படுத்தி தார் ரோடு போடாமல் வெறும் ஜல்லி கற்களை கொண்டு கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளது. இது நாளடைவில் பெயர்ந்து ரோட்டின் மீது வெறும் கற்காளாக கிடக்கின்றது.

இதனால், வேகமாக செல்லும் வாகனங்கள் இந்த பாலத்தின் மீது செல்லும்போது மண் தூசி பறக்கிறது. இதனால், பின்னால் வரும் வாகனத்திற்கு முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும், இதன் அருகில் வந்து திடீரென பிரேக் பிடித்தால் வாகனங்கள் நிற்பதில்லை. இதனால், வாகன் ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்படுகிறது. மேலும், பள்ளிக்கு வரும் குழந்தைகள் சைக்கிளில் வரும்போதும் நிலை தடுமாறி விழும் நிலை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே, வஞ்சிப்பாளையம் பகுதியில் ரோடுகளை சமப்படுத்தி தார் ரோடு அமைத்து தர வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: