திருக்கனூரில் விஷகுளவி கூடு அழிப்பு

திருக்கனூர், நவ. 22:  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காட்டுப்பகுதியில் வாழும் விஷகுளவிகள் தற்போது விவசாய நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பனைமரங்களில் களிமண்ணால்  கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் திருக்கனூர் பைபாஸ் சாலையின் ஒரு பகுதியில் உள்ள பனைமரத்தில் மிகப்பெரிய அளவில் விஷகுளவிகள் களிமண்ணால் கூடு கட்டி இருந்தது. திருக்கனூர் கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாக செல்வது வழக்கம். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் இந்த சாலையின் வழியேதான் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில், பனைமரத்தில் கூடு கட்டியுள்ள விஷகுளவியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கடந்த 20ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, திருக்கனூர் தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விஷகுளவி கூண்டை அகற்றினர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: