15வது நிதிக்குழு பரிந்துரைகளால் மாநிலங்களுக்குதான் தண்டனை

புதுச்சேரி, நவ. 22: 15வது நிதிக்குழு பரிந்துரைகளால் மாநிலங்களுக்கு தான் தண்டனை என்று கனிமொழி எம்பி பேசினார்.  புதுச்சேரியில் இந்திய நிதி கூட்டாட்சியில் உள்ள சவால்கள் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: நிதி விஷயத்தில் மத்திய அரசு பல முடிவுகளை எடுத்துள்ளதுடன், ஒரே மொழி தொடங்கி பல விஷயங்களிலும் ஒரே என்ற சித்தாந்தத்தை நோக்கி செல்கிறது. பிரச்னைகளுக்கான விவாதம் என்ற நிலை மாறி மவுனம் என்பதை நோக்கி அனைத்து தரப்பினரும் செல்ல தொடங்கியுள்ளனர். அனைத்து தரப்பினரின் மவுனம், அமைதி பயமாக இருக்கிறது. அனைத்திலும் ஒன்று என்ற நிலை சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச்செல்லும். ஜம்மு - காஷ்மீர் பிரிவை தடுக்க முடியவில்லை. மக்களவையில் குரல் எழுப்பியும் அதை செய்ய முடியவில்லை. இதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை பார்க்கும்போது நன்றாக செயல்படும் மாநிலங்களுக்கு தண்டனைதான் கிடைக்கும் என்பதுபோல் உள்ளது. குறிப்பாக தமிழகம், கேரள மாநிலங்கள் அதிக பாதிப்பு அடையும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவமே திமுகவின் நிலைப்பாடு, இதை நோக்கி குரல் எழுப்புகிறோம். ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக திமுகவை காட்டி சிக்கலை உருவாக்குகிறார்கள்.

 ஜிஎஸ்டி வரி வருவாயை எடுத்து கொண்டு, அதற்கான மாநில அரசுகளின் பங்குகளை தராதது ஒருபுறம் இருக்கிறது. அதேபோல் மக்களவை உறுப்பினர்களுக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் பணி முடித்தோருக்கு நிதியை தர முடியாத சூழல் நிலவுகிறது. உயர் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி முறையால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மாநிலங்களின் உரிமை, நிதி பறிப்பு ஆகியவற்றையும் தாண்டி மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்தும் போக்கில் உள்ளது. அதற்கு உதாரணமே ஜம்மு காஷ்மீர் பிரிப்பு. எதுவும் நாட்டில் நடக்கலாம் என்ற சூழலே நில

Related Stories: