4 ஜீப் டிரைவர், 2 பதிவறை எழுத்தர். 8 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், நவ. 20: கரூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் ஒன்றிய தலைப்பில் உள்ள 4 ஜீப் ஓட்டுனர்கள், 2 பதிவறை எழுத்தர்கள், 8 அலுவலக உதவியாளர்கள் காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வரும் 30ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஜீப் ஓட்டுனர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டஇன சுழற்சி முறைக்கு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரம், இனசுழற்சி விவரம் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விபரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் கல்வித்தகுதி இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இன சுழற்சி, வயது, கல்வித்தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 30ம் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஜீப் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.இடம் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும். காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கரூர் மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: