விதி மீறி குழந்தைகள் இல்லம் நடத்தினால் சட்ட நடவடிக்கை

நாமக்கல், நவ.20: நாமக்கல் மாவட்டத்தில் விதி மீறி குழந்தைகள் இல்லம் நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகளை வைத்து பராமரிக்கும் அனைத்து இல்லங்களும், இளைஞர் நீதிச் சட்டப்படி(பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) பதிவு செய்யப்பட்ட பின்னரே நடத்துதல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் இல்லங்கள் நடத்தினால், ₹1 லட்சம் அபராதத்துடன், 1 ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்படும். இதுகுறித்து மேலும் விபரம் அறிந்து கொள்ள, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 04286 233103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். தகவல் தெரிவிப்பவரின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: