மாவட்ட சட்டப்பணிகள் விழிப்புணர்வு கூட்டம்

திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு  தலைவருமான இளவழகன், சார்பு நீதிபதிகள் சுஜாதா, சையத் பர்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு, ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழாமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினர். ரிக் உரிமையாளர் சங்கங்களின் மாநில சம்மேளன தலைவர் சீனிவாசா கந்தசாமி, செயலர் கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், துணைத்தலைவர் அசோக்குமார், லாரி உரிமைாயாளர்கள் சங்க தலைவர் பாரி கணேசன், சட்ட ஆலோசகர் பரணீதரன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து  வந்திருந்த ரிக் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 இதில், போர்வெல் குழியில் குழந்தைகள் விழாமல் தடுக்க, கேசிங் பைப்புகளை அகற்றாமல் மூடி போட்டு மூடி வைக்க அரசு உத்தரவிட வேண்டும். ரிக் வண்டிகள் ஆழ்துளை கிணறு  அமைக்க பதிவுக்கட்டணம் ₹15 ஆயிரம் என்பதை ₹5 ஆயிரமாகக் குறைக்க வேண்டும். ஓரிரு நாளில் போர்வெல் அமைக்க உத்தரவு தரவேண்டும். விவசாயிகள் வீட்டு உரிமையாளர்கள் போர்வெல் அமைக்க அனுமதி உடனே வழங்கப்பட வேண்டும் என்று ரிக் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.   கலெக்டரிடம் இது குறித்து பேசி நல்ல தீர்வு காணப்படும் என்று நீதிபதி இளவழகன் கூறினார்.

Related Stories: