போலீஸ் உடல்தகுதி தேர்வு விழுப்புரத்தில் மீண்டும் துவங்கியது

விழுப்புரம், நவ. 19:  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வு கடந்த 6ம் தேதி முதல் விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வந்தது. 9ம் தேதி முதல் நிர்வாக காரணங்களுக்கான தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் நேற்று காலை முதல் உடல்தகுதித்தேர்வு தொடங்கியது. 9ம் தேதி பங்கேற்க வேண்டிய 900 பேர் நேற்று பங்கேற்றனர். அவர்களுக்கு மார்பளவு, உயரம், 1500 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடந்தது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. 11ம் தேதியில் பங்கேற்பவர்கள் இன்று பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.  12ம் தேதியில் பங்கேற்கயிருந்தவர்கள் 20ம் தேதியிலும், 13ம் தேதியில் பங்கேற்கயிருந்தவர்கள் 21ம் தேதியிலும் உடல்தகுதித்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். அதே போல் ஏற்கனவே நடத்தப்பட்ட முதல்கட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் 14, 15ம் தேதியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் வரும் 22, 23ம் தேதி கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த காவல்நிலையத்திற்குட்பட்ட போலீசார் மூலம் தனித்தனியே அழைப்புக்கடிதம் நேரடியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Related Stories: