வெய்க்காலிபட்டி கல்லூரியில் தேசிய கல்வி தினம்

கடையம், நவ. 19:  கடையம் அடுத்துள்ள வெய்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர்  போஸ்கோ குணசீலன் தலைமை வகித்தார். முதல்வர் மேரி ராபலீன் கிளாரட் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக   தமிழ்நாடு  திறந்தநிலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அருள் லாரன்ஸ் தலைமையில் “அனைவருக்கும் கல்வி கொள்கை நிறைவேறியுள்ளது - நிறைவேறவில்லை “ என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் தங்களின் வாதத்தை சிறப்பாக எடுத்துரைத்தனர். அனைத்து பேராசிரியர்கள் மாணவ மாணவிள்  கலந்து கொண்டனர்.

Related Stories: