ரூ.1.25 லட்சம் செலவில் நவீன சமுதாயக்கூடம்

வில்லியனூர், நவ. 14:  வில்லியனூர் தொகுதி உத்திரவாகினிபேட் பகுதி மக்கள் நீண்ட காலமாக சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் நவீன சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ரூ.25 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>