மாநில சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கு மாணவர்கள் தேர்வு

புதுச்சேரி, நவ. 13:  புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குநர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் கடந்த 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான மாநில சிறந்த படைப்பாளி குழந்தை விருதுகளுக்கான மாநில அளவிலான போட்டிகளில் 9 வயது முதல் 16 வயதுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் புதுச்சேரி காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து படைப்பாற்றல் நிகழ்கலையில் நடனம் 42, வாய்ப்பாட்டு 14, இசைக்கருவி 11 பேரும், படைப்பாற்றல் கலையில் 38 பேரும், படைப்பாற்றல் எழுத்து பிரிவில் 20 பேரும், அறிவியல் பிரிவில் 20 பேரும் பங்கேற்றனர். வயலின் பிரிவில் புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தின் ஆராதனா, மிருதங்கம் பிரிவில் லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா பள்ளி சுதர்சன், வாய்ப்பாட்டு பிரிவில் பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரமம் பள்ளி சன்மதி,

நடனம் பிரிவில் வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி அருணா, மூலகுளம் அமிர்தா வித்யாலயம் ரித்திகா, லாஸ்பேட்டை குளூனி பள்ளி சவுந்தர்யலட்சுமி, வில்லியனூர் ஆச்சார்யா சிக்‌ஷா மந்திர் சாருலதா, படைப்பாற்றல் கலை பிரிவில் மாகே எக்சல் பப்ளிக் பள்ளி ஜோதிகா, கூடப்பாக்கம் ஜவகர் பள்ளி ஜெயகணேஷ், லாஸ்பேட்டை குளூனி பள்ளி செந்தூரிகை, படைப்பாற்றல் எழுத்து பிரிவில் பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரமம் பள்ளி பிரீத்தி, ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி பள்ளி சர்வோஷினி, ஏனாம் மகாத்மா காந்தி அரசு ஆண்கள் பள்ளி குமார்ராஜா, அறிவியல் பிரிவில் மூலகுளம் ஸ்டேன்ஸ்போர்டு பள்ளி திஷ்னா, காரைக்கால் குட் ஷெப்பர்டு பள்ளி ரோஷினி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டிதழ் மற்றும் நினைவு பரிசு அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: