பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.13:  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, மாவட்ட செயலாளர் வெங்கிடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும்.  மாணவர்களுக்கு வழங்கும் உணவூட்ட செலவீன மானிய தொகையை உணவுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் உள்ள ஏராளமான சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: