முதலாம் உலகப்போர் 101வது நினைவு தினம் புதுச்சேரி போர்வீரர் நினைவு சின்னத்தில் கலெக்டர், பிரெஞ்சு துணைதூதர் அஞ்சலி

புதுச்சேரி, நவ. 12:   முதலாம் உலகப்போரின் 101வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர்வீரர் நினைவு சின்னத்தில் மாவட்ட கலெக்டர் அருண், பிரெஞ்சு துணைதூதர் கேத்ரின் ஸ்வார்ட் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடந்தது. இதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை ஓரணியாகவும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் எதிரணியாகவும் போரிட்டன. போரில் பிரான்ஸ் காலனி பகுதிகளாக இருந்த புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

முதலாம் உலகப் போர் 1918 நவம்பர் 11ம்தேதி முடிவுக்கு வந்து, போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு 101 ஆண்டுகள் நினைவு தினம் புதுச்சேரியில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண், பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் ஸ்வாட் ஆகியோர் மலர்வளையம் வைத்து உலகப்போரில் இறந்த இந்திய மற்றும் பிரெஞ்சு வீரர்களுக்கு மவுன அஞ்சலி

செலுத்தினர்.மேலும் இருநாட்டு தேசிய கொடிகளும் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் பிரெஞ்சு ராணுவத்தினர், பொதுமக்கள் பலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி ெசலுத்தினர்.

Related Stories: