காரைக்காலில் முதல் உலகப்போரின் 101வது நினைவு தினம் அனுசரிப்பு

காரைக்கால், நவ. 12: காரைக்காலில் முதலாம் உலகப்போரின் 101ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. காரைக்காலில் ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் முதல் உலகப்போரின் 101வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  காரைக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவுத்தூணில் காரைக்கால் தாசில்தார் முத்து மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர். முன்னதாக, பிரெஞ்சு வீரர் சிலை முன்பு, உலகப்போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக பிரார்த்தனையும், பிரெஞ்சு கொடி ஊர்வலமும் நடைபெற்றது. தொடர்ந்து, காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Related Stories:

>