திருக்குறள் மைய கூட்டம்

பாபநாசம், நவ. 12: பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி தொடக்கப்பள்ளி வளாகத்தில் உலகத் திருக்குறள் மைய கூட்டம் நடந்தது.தில்லைநாயகி தலைமை வகித்தார். நல்லாசியர் வசந்தா, சுமதி, சுதா முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் சித்ரா வரவேற்றார். அறிவுடைமை என்ற தலைப்பில் ராஜலெட்சுமி, அன்புடைமை என்ற தலைப்பில் கீர்த்தனா, இல்லறமே நல்லறம் என்ற தலைப்பில் பூர்ணிமா, விருந்தோம்பல் என்ற தலைப்பில் மது வினோலியா பேசினர். கூட்டத்தில் மனோகரன், ஜெயராமன், குருசாமி, கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: