கடலுக்கு செல்ல வேண்டாம் ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை

அதிராம்பட்டினம், நவ. 8:

அதிராம்பட்டினம் கடற்கரையோர கிராமங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத் துறையினர் ஒலி பெருக்கி மூலம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.புல் புல் புயல் உருவாகியிருப்பதால் கடலில் பலத்த காற்றும் கடல் சீற்றமும் ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கிதெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில உள்ள மீனவ கிராமங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை இணைந்து ஒலிபெருக்கி மூலம் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் அதிவேக காற்றும், கடல் சீற்றமும் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பை மீனவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் 1,000 பைபர் படகுகள் மற்றும் இதன்மூலம் மீன்பிடி தொழில் செய்யும் 3000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
Advertising
Advertising

Related Stories: