குடிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

உடுமலை,நவ.8:  குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: சோமவாரப்பட்டி ஊராட்சியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல, பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்படும் என்றார்.

குப்பம்பாளையம் மயானக்கரை குளம் தூர்வாரப்பட்டதை பார்வையிட்டு, பனை விதைகளை நட்டு வைத்தார். சீரமைக்கப்பட்ட கொண்டம்பட்டி சாலை, சோமவாரப்பட்டி வாரச்சந்தை கூடம், தடுப்பணை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்டன், சிவகுருநாதன், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, சிவநாத், உடுமலை வட்டாட்சியர் தயானந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: