பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்கள் துணிகரம்

Advertising
Advertising

திருவெறும்பூர் அருகே

திருவெறும்பூர், நவ.7: திருவெறும்பூர் அருகே தொண்டமான்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டமான்பட்டி ரயில் நிலையம் அருகே வசிப்பவர் விஜயலட்சுமி (50). இவர் நேற்று, கூத்தைப்பாரில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி வீட்டுக்கு வந்த விஜயலட்சுமி வீட்டின் கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் வெளிச்சம் தெரிந்துள்ளது. என்ன வெளிச்சம் தெரிகிறது என்று பார்த்தபோது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: