லேப்டாப் வாங்க வந்த வாலிபர் திடீர் சாவு

புதுச்சேரி, நவ. 7:  விழுப்புரம்  மாவட்டம் விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் நேரு வீதியை சேர்ந்த கோதண்டபாணி  மகன் ஏழுமலை (38). விவசாயி. நேற்று முன்தினம் மதியம் இவர், புதுச்சேரிக்கு  லேப்டாப் வாங்குவதற்காக நண்பர் குமார் என்பவருடன் வந்தார். காமராஜ்  சாலையில் பாலாஜி தியேட்டர் அருகே ஆட்டோவில் சென்றபோது திடீரென ஏழுமலை  மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு ெசல்லப்பட்டார்.  அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவரகள், வரும் வழியிலேயே ஏழுமலை இறந்து  விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: