அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் திணறல்

அன்னூர்,நவ.7:கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னூர், குன்னத்தூர், கணேசபுரம்,கரியாம்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காலை 8 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக அன்னூர்- மேட்டுப்பாளையம் புறவழிச்சாலையில் அதிகளவில் கனரக வாகன போக்குவரத்து இருக்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து வாழைக்காய்,உருளைக்கிழங்கு, ஊட்டி மலைகாய்கறிகான பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளும், காரமடையில் கறிவேப்பிலை போன்றவையும் திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.வடகிழக்கு பருவமழை ஓய்ந்தநிலையில் தற்போது நகரின் புறவழிச்சாலை மற்றும் சத்தி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முன்னாள் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் மிதமான வேகத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே பயணிக்கின்றனர். காலை 9 மணி வரை பனிமூட்டம் புகை மூட்டம் போல காணப்படுவதால் கனரக வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

Related Stories: