லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

வில்லியனூர், நவ. 5:  வில்லியனூர்  அடுத்த அகரம், ஊசுட்டேரி பகுதியில் உள்ள  லட்சுமி நாராயணா மருத்துவ  கல்லூரியில் சமூக நலத்துறை சார்பில் பல்ேவறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் ஆண்டு மருத்துவ  மாணவர்களை ெகாண்டு டெங்கு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இப்பேரணியை  கல்வித்துறை தலைவர் பாலகுருநாதன் துவக்கி வைத்தார். மேலும், மருத்துவ  அலுவலர் துரைராஜ், சமூக நலத்துறை மருத்துவ தலைமை ஆசிரியர்கள் ரஜினி,  பரதலட்சுமி, கண்ணன், முதுநிலை மருத்துவ மாணவர்கள் பொன்மலர், சிவபிரகாசம்,  சுகாதார ஆய்வாளர் கதலபிதாபன், மருத்துவ பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியில் துவங்கிய பேரணி  கூடப்பாக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்த முழக்கங்களை  எழுப்பினர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களுக்கு துண்டு  பிரசுரங்களை விநியோகித்தனர்.

Related Stories: