ரங்கம் கீதாபுரம் பகுதியில் குப்பையால் டெங்கு பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்

ரங்கம், நவ.5: ரங்கம் கீதாபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றாததால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்குநோய் டெங்கு பரவும் அபாய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனே அகற்றி நோய்பரவாமல் பாதுகாத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.ரங்கம் 5-வது வார்டில் மங்கமாநகர், கீதாபுரம், புளிமண்டபம் புதுதெரு, வீரேஸ்வரம் ஆகிய பகுதியில் குப்பைகளை முறையாக கொட்டுவதில்லை. இதனால் அங்கு ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்த்து வரும் நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து ரங்கம் கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து கீதாபுரத்தை சேர்ந்த கலியபெருமாள் தெரிவித்ததாவது: கீதாபுரத்தை பொதுமக்கள் அப்பகுதியில் உணவு கழிவுகள் மற்றும் பென்கள் பயன்படுத்தும் நாப்கின் என்று பல கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதற்கு ஒரேயொரு தீர்வு அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவர் மீது ரங்கம் கோட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ரங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றால் கீதாபுரம், புதுதெரு, வீரேஸ்வரம் என்றாலே ரத்தபரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என்று பல சோதனைகள் செய்து வருகின்றனர். அந்தளவுக்கு இப்பகுதிகளில் குப்பை, கழிவுகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: