திருச்சி, சேலம் செல்லும் அரசு ஏசி பஸ்கள் இயக்கப்படும் நேர விவரம்

கோவை, நவ.5: கோவை கோட்டத்தில்  கோவை மண்டலத்திற்கு 6, ஈரோடு  மண்டலத்திற்கு 2, திருப்பூர் மண்டலத்திற்கு 2 என மொத்தம் 10 பேருந்துகள்  ஒதுக்கப்பட்டன. இவைகளில் முதற்கட்டமாக 3 பேருந்துகள் கடந்த மாதம் 24ம் தேதி இயக்கப்பட்டது. இதில் திருச்சி செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7.15, மதியம் 2.45 மணி, இரவு 9.15 மணிக்கு புறப்படும் மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து காலை 5.55 மணி, மதியம் 1.40, இரவு 9.15 மணிக்கும் கிளம்பும், இவை கரூர், மற்றும் காங்கேயத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும். இதற்கு கட்டணமாக ரூ.225ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதேபோல் சேலம் செல்லும் பஸ்கள் காந்திபுரத்தில் இருந்து காலை 6.36 மணி, 7.40, மாலை 4.02, 5.33 மணிக்கும், மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து காலை 11.50, மதியம் 12.15, இரவு 9.36, மற்றும் 11.40 மணிக்கும் இயக்கப்படும். இதற்கு பயண கட்டணமாக ரூ.190 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவை கோட்ட மேலாண் இயக்குநர் அன்பு ஆபிராகம் தெரிவித்துள்ளார்.

Related Stories: