நோயாளிகள் முகம் சுழிப்பு வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை விவசாய விளக்க பயிற்சி

திருத்துறைப்பூண்டி, நவ.1: மறைந்தபாரம்பரிய நெல் மீட்பு போராளியும் ஜனாதிபதி விருது பெற்றஆதிரெங்கம் நெல் ஜெயராமன் மாதிரி பண்ணை மற்றும் விதை வங்கியில் தஞ்சாவூர் செங்கிபட்டி ஆர்.வீ.எஸ். வேளாண் கல்லூரி மாணவ ,மாணவிகளுக்கு இயற்கை விவசாய நேரடி செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கருப்பு கவுணி என்ற பாரம்பரிய நெல் ரகம் குறித்து நாற்றுவிடுதல் முதல் நடவு செய்வது வரை உள்ள நிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கிரியேட் மாநிலதிட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், பயிற்சியாளர் உதயகுமார் மற்றும் விவசாய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: