ஆத்தூர் நகராட்சியில் பழைய இரும்பு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஆத்தூர், அக்.31:ஆத்தூர் அருகே உடையார்பாளையம் பகுதியில்  உள்ள கடைகளில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் திருமூர்த்தி  தலைமையில் நேற்ற ஆய்வு மேற்கொண்டனர். ஆத்தூர் உடையார்பாளையம் காமராஜனார் சாலை, வீரகனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில், நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது உடையார்பாளையம் பகுதியில், தங்கவேல் என்பவரது பழைய இரும்பு கடை, சுகாதாரமற்ற முறையில் பாதுகாப்பின்றி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு நகராட்சி அலுவலர்கள் 5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், கடையை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். தொடர்ந்து அருகில் இருந்த உணவு விடுதியில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை  கவர்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், விடுதி உரிமையாளரிடம் 1000 அபராதம் வசூலித்தனர்.

Related Stories: