அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்

திருவண்ணாமலை, அக்.27: அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மழை காலம் தொடங்கியுள்ளதையடுத்து டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதையொட்டி காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும். 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அல்லது அவர்களது பெற்றோர்களுக்கு உரிய தகவலை தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் காலை வழிபாடு நேரத்தில் டெங்கு, மலேரியா தடுப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: