விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு

சேலம், அக்.24:  விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக கண் பார்வை தினமானது வருடந்தோறும் அக்டோபர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் மக்களிடையே கண் பார்வை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும். இதை முன்னிட்டு விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார்,விம்ஸ் மருத்துவமனை மருத்து இயக்குனர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துறையை சேர்ந்த கண் ஒளியியல் பிரிவு மாணவர்கள் நாடகம், வில்லுபாட்டு வாயிலாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி, பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான விளக்ககாட்சி போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு துறையின் டீன் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கண் ஒளியியல் துறை பேராசிரியை தமிழ்சுடர், பிரியதர்ஷினி,வளர்மதி மற்றும் பேராசிரியர்கள் டாக்டர்கள் பார்த்திபன், ஹரிஷ்ராஜ், அலுவலக மேலாளர் செந்தில்நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: