ஜலகண்டாபுரம் அருகே சாய கழிவு நீரை கிணற்றில் தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு

ஜலகண்டாபுரம், அக்.24: ஜலகண்டாபுரம் அருகே கிராமபகுதியில் இயங்கி வரும் சாய, சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் விவசாய கிணற்றில் தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர் மாசு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்தஆவடத்தூர் கிராமம், கோனூரான்காடு பகுதியில் 2 சாயமற்றும் சலவைபட்டறைகள் இயங்கி வருகிறது. கடந்த 2 வருடங்களாக இயங்கிவரும் இந்தசாயப்பட்டறைகளுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து வரும் குழாயில் மோட்டார் வைத்து முறைகேடாகதண்ணீர் உறிஞ்சப்படுவதுடன் இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் சாயபட்டறைகளின் அருகே பள்ளம் தோண்டி தேக்கி வைப்பதுடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிலும் தேக்கி வைக்கின்றனர்.இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு ஆவடத்தூர் மற்றும் தோரமங்கலம் ஆகிய இரண்டு கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அப்பகுதிமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.இது தொடர்பாகநடவடிக்கை எடுக்ககோரிஅப்பகுதிமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியஅதிகாரிகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் மேட்டூரில் நடந்த ஜமாபந்தியில் 5 க்கும் மேற்பட்ட முறை மனுவாகவும் நேரிலும் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதிமக்கள்கூறுகையில்: ஆவடத்தூர் கிராமம், கோனூரான்வளவு பகுதியில் உள்ள விவசாயநிலத்தில் 2 சாயமற்றும் 2 சலவைபட்டறைகள் இயங்கிவருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் அதன் உரிமையாளர்கள்அவர்களது விவசாயநிலத்தில் உள்ள கிணற்றில் தேக்கி வைக்கின்றனர்.இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அருகில் உள்ள மற்றவிவசாயகிணறுகள்மற்றும் நிலத்தடி நீர் ஆகியவைமாசடைந்து வருவதால் நோய் பாதிப்பு ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து உரியநடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர், மாசு கட்டுப்பட்டு அதிகாரிகள் ஆகியோருக்கு பல முறை புகார் மனு அனுப்பியும் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்கதயக்கம் காட்டுகின்றனர். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொது மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: