பேனா நண்பர்கள் பேரவை கூட்டம்

ஆத்தூர், அக்.23: சேலம் மாவட்டம் ஆத்தூரில் அகில இந்திய பேனா நண்பர்கள் பேரவையின் சேலம் மாவட்ட கிளை கூட்டம் விநாயகபுரம் கேம்பிரிட்ஜ் பள்ளி வளாகத்தில் மாவட்ட கிளை அமைப்பாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.மேட்டூர் கௌரிசங்கர் முன்னிலை வகித்தார். ஆத்தூர் சித்தனாதன் வரவேற்றார். கூட்டத்தில் 2020ம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடைபெறும் வெள்ளி விழா கூட்டத்திற்கு சேலம் மாவட்டத்திலிருந்து அதிக அளவில் கலந்து கொள்வது.பேரவைக்கு அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சிலம்பாட்டம், டேக்வாண்டோ தேசிய அளவில் சாதனை படைத்த மாவட்ட அமைப்பாளரின் மகன்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அண்ணாதுரை, சரவணன், முருகன், ராமச்சந்திரன், வெங்கடேசன், ஜெய்சங்கர், சுகன், புதல்வன், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரிசங்கர் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: