திருச்சியில் 5 பேருக்கு டெங்கு

திருச்சி, அக். 18: திருச்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வார்டுகளில் தினமும் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 பேர் டெங்கு அறிகுறியுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: