தண்டராம்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு

தண்டராம்பட்டு, அக்.18: தண்டராம்பட்டு அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார். தண்டராம்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 536 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவ, மாணவிகளிடம் பாடப்புத்தகத்தை கொடுத்து அவர்களது கற்றல் திறனை ஆய்வு செய்தார். பின்னர், தாலுகாதோறும் ஒரு முன்மாதிரி பள்ளி உருவாக்கப்படுகிறது. அதன்படி, தண்டராம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியை முன்மாதிரி பள்ளியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.ஆய்வின்போது, பிடிஓக்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகன், தாசில்தார் நடராஜன், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் விஏஓக்கள் உடன் இருந்தனர்.

Related Stories: