முருகன் கோயிலில் கிருத்திகை விழா

ஊட்டி, அக்.18: ஊட்டி அருகேயுள்ள அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோயிலில் கிருத்திகை விழா நேற்று நடந்தது. ஊட்டி அருகே கீழ் அப்புகோடு பகுதியில் ஆனந்தமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் மாதந்தோறும் கிருத்திகை விழா மற்றும் பண்டிகை நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 16ம் தேதியன்று ஆனந்தமலை முருகன் கோயிலில் கிருத்திகை விழா நடந்தது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணிக்கு சித்தி விநாயகருக்கு அலங்கார பூஜையும், ஆனந்தமலை முருகனுக்கு அபிேஷக பூஜையும், ஏழு ஹெத்தையம்மன், நவ கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12 மணி வரை ராமசந்திரன் குழுவினாின் சிறப்பு பஜனை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஆலட்டணை மணிகுண்டன் தலைமையில் ஆன்மீக நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கலாச்சார நடன நிகழ்ச்சி, அன்னதான நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தனர்.

Related Stories: