திண்டுக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு

திண்டுக்கல், அக். 17: படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (அக்.18) காலை 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர்.  இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களின் சுயவிபர குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளி நகல் (ஜெராக்ஸ்) களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.  மேலும், இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின்  திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின்  விபரத்தினையும், தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தொலைபேசி(0451-2461498) வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Advertising
Advertising

இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின்  வேலைவாய்ப்பு அலுவலக  பதிவு, எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும், அரசு துறைகளில்  கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.  மேலும், இம்முகாமில் கலந்துகொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும்.  எனவே, தகுதியுடைய பதிவுதாரர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: