பாம்புகள் நடமாட்டம் இருளில் மூழ்கும் முதலியார்பட்டி

கடையம், அக். 17:  கடையம் யூனியனுக்குட்பட்டது முதலியார்பட்டி ஊராட்சி.  இங்குள்ள  காந்திநகரில் 1வது, 2வது, 3வது  ஆகிய  தெருக்களில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகள் இருள் சூழ்ந்து கிடப்பதால் விஷ ஜந்துகள் வீட்டிற்கு புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று  முன்தினம் இந்த பகுதியில் புகுந்த கருநாகத்தால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர். பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புபவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

வெறிநாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விகுறியாக உள்ளது. இதுகுறித்து முதலியார்பட்டி ஊராட்சி (பொறுப்பு) செயலர் வேல்சாமியிடம் கேட்ட போது, மின்வாரிய ஊழியர்களிடம் பேசியுள்ளேன். விரைவில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் தெரு விளக்குகளை போர்க்கால அடிப்படையில் எரியசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: