மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கு அரசாணை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 16: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற் சங்கத்தினர் திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நல வாரிய அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தினர் 60 வயது பூர்த்தியான கிடப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஓய்வூதிய கேட்பு மனு விண்ணப்பங்களுக்கு உடனே அரசாணை வழங்க வேண்டும். புதிய நடைமுறைகளை அமல்படுத்தும்போது கால அவகாசம் வழங்க வேண்டும், அதன் நடைமுறைகளை தொழிற்சங்க தலைவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் பணி மாற்றி செய்துவரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு உண்டான அடையாள அட்டையை உடனே வழங்கிடவேண்டும். திருமண உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம், தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் போன்ற பணபயன்களை வழங்க நிரந்தர நல நிதியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நல வாரிய அலுவலத்தை முற்றுகையிட்டு முற்றுகையிட்டனர். இதையடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி சிவசாமி தலைமை வகித்தார். உடுமலை உடல் உழைப்பு தொழிலாளர் சங்க நிர்வாகி குணசேகரன், தொமுச ரங்கசாமி, எம்.எல்.எப் சம்பத், ஹெச்.எம். எஸ் முருகன் ஐ.என்.டி.யு.சி மகளிர் அணி மாவட்ட தலைவர் கவிதா மணிவாசகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: