ரூ.4.44 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

அவிநாசி, அக். 16: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் இங்கு தென்னை மற்றும் பனங்கருப்பட்டிகளை விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் நேற்று நடந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 20 கிலோ தென்னங்கருப்பட்டியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். தென்னங்கருப்பட்டி ஒரு கிலோ ரூ.111 வீதம், ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்துக்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி வரத்து இல்லை.இந்த தகவலை கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: