ஆன்லைன் பதிவு அவசியம் விலங்குகள்- மனித மோதலை தடுக்காத வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சுவரொட்டி

கொடைக்கானல், அக். 16: விலங்குகள்- மனித மோதலை தடுக்காத வனத்துறையை கண்டித்து கொடைக்கானலில் விவசாயிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொடைக்கானல் மலைப்பகுதியில் வனவிலங்குகளால் மனித உயிர்களுக்கு தொடர்நது ஆபத்து உள்ளது. குறிப்பாக யானை, காட்டுமாடுகளால் மனித பலிகள் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுமாடு தாக்கியதில் கானல்காடு கிராமத்தில் ஊர் தலைவர் ராஜாகிளி பலியானார். ஆனால் வனவிலங்குகள், மனித மோதலை தடுக்க வனத்துறை இதுவரை நிரந்தர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் வனத்துறையை கண்டித்து தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் சார்பில் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில், ‘காட்டுமாடு தாக்கி இறந்த ராஜாகிளி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், விவசாய நிலங்களில் தங்கி அச்சுறுத்தி வரும் காட்டுமாடு, யானையை உடனடியாக விரட்ட வேண்டம், வனங்களில் வைத்து வனவிலங்குகளை பராமரிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘வனவிலங்குகள், மனித மோதல்களை தடுக்க வனத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும்’ என்றனர்.

Related Stories: