கோவா கராத்தேவில் கொடைக்கானல் மாணவர்கள் பதக்கங்களை அள்ளினர்

கொடைக்கானல், அக். 16: கோவாவில் இந்தியா, இலங்கை நாடுகளின் பள்ளி மாணவர்களுக்கிடையே கராத்தே போட்டி கடந்த அக்.12, 13ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.சோட்டோ கான், சிட்டோ ரியா, கொஜி ரியோ உள்ளிட்ட முறைகளில் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் பங்கேற்ற கொடைக்கானல் பள்ளிகளை சேர்ந்த நியுசன், இன்பரசன், சாமுவேல் தங்கமும் மற்றும் வசந்தரா லிங்கம்,

பிரஜின், சாய் ஆதன், கிரன் ஆகாஷ், கிறிஸ்டோபர் ஆகியோர் வெள்ளி- வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து கராத்தே மாஸ்டர் சக்திவேல் கூறியதாவது, ‘கோவாவில் நடந்த இந்தியா, இலங்கை இடையிலான கராத்தே போட்டியில் கொடைக்கானலை சேர்ந்த மாணவர்கள் 3 தங்கம் உள்பட 27 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டால் பல போட்டிகளில் சிறப்பாக வெல்ல முடியும்’ என்றார்.சாதனை படைத்த மாணவர்கள் கோவாவில் இருந்து நேற்று மாலை கொடைக்கானல் வந்தடைந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: