விவசாயிகள் கவலை சிவகாசி நகராட்சி பள்ளி பஸ் நிறுத்தம் அருகே பயங்கர ‘டிராபிக்’

சிவகாசி, அக்.15: ஆவின் கடைகளில் பால், நெய், பால்கோவா போன்ற பொருட்களை விற்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது. சிவகாசி எஸ்.எச்.என்.வி ஆண்கள் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பிள்ளையார் கோவில், மற்றும் பெரிய ஆலமரம் இருந்தது. இங்கு பஸ்கள் நின்றுசெல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி பிள்ளையார் கோவிலையும், ஆலமரத்தையும் வருவாய் துறையினர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றினர். தற்போது இதே இடத்தில் ஆவின் விற்பனை கடை அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இங்குள்ள பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் இருக்கும். வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த இந்த பள்ளி செல்லும் சாலை ஒரு வழிசாலையாக மாற்றப்பட்டு காலை, மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிப்பர். திருவில்லிபுத்தூர் செல்லும் பஸ்கள், வாகனங்கள் பெரியகுளம் சாலை வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும். இவ்வளவு போக்குவரத்து மிகுந்த சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் இடத்தில் ஆவின் விற்பனை கடை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இதே போன்று சிவகாசியில் மாரியம்மன் கோவில் அருகே காலை, மாலை வாகன பெருக்கத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இங்குள்ள கிருதுமால் ஓடையை ஓட்டியுள்ள காலி இடத்தில் ஆவில் விற்பனை கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிவகாசி பஸ்நிலையம் எதிரில், பஸ் உள்ளே வரும் பகுதியில் ஆவின் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்நிலையம் எதிரே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, பஸ் நிலையம் அருகே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: