திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு 12ல் பேச்சு, கட்டுரை போட்டி

சேலம், அக்.10: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெறுகிறது. இப்ேபாட்டி வரும் 12ம் தேதி (சனி) காலை 9 மணிக்கு 5 ரோட்டில் உள்ள கேஎம்பி திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர்கள் சிவராமன், சங்கர், சதிஷ்குமார், மாறன், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை கழக நடுவராக சாவல்பூண்டி சுந்தரேசன், தலைமை கழக பார்வையாளராக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் துரை கலந்து கொள்கின்றனர்.

மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல், இரண்டாம் பரிசு பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியும். மாநில அளவிலான இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் ரொக்க பரிசு ₹25,000, ₹15,000, ₹10,000, ஆறுதல் பரிசாக ₹5,000 (10 நபர்களுக்கு)வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிலையத்தின் சான்றுகளோடு அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertising
Advertising

Related Stories: