வரி உயர்வுதான் ஆளும் கட்சியின் சாதனை

புதுச்சேரி, அக். 10:  மக்கள் மீதான வரி உயர்வுதான் ஆளும் கட்சியின் சாதனை என அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து கவிக்குயில் நகரில் பிரசாரம் செய்தபோது அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ கூறியதாவது: குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. தூங்கும்போது ஆட்சியை கலைக்கப்போவதாக பயந்துபோய் இருப்பவர்கள் ஆளும் கட்சியினர்தான். முதல்வர் பதவிக்கு இப்ப, இருப்பவர் தகுதியில்லை என்று நினைக்கின்றனர். ஏனென்றால் அவர் இன்னும் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகத்தான் இருக்கிறார்.  தனது செயல்படாத தன்மையை  மறைத்து எதிர்க்கட்சி தலைவர் மீது பழி போட்டு வருகிறார்.

Advertising
Advertising

  இலவச அரிசி 19 மாதத்திற்கு வழங்கவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கு போனது?,  ரங்கசாமி ஆட்சியில் அனைவருக்கும் இலவச துணி வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கொடுத்தீர்களா? ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறி முதல் கையெழுத்து இட்டீர்கள். கொடுத்தீர்களா? மாறாக மின் கட்டணத்தை உயர்த்தினீர்கள். புதியதாக குப்பை வரி கொண்டு வந்தீர்கள். குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவைகளை உயர்த்தியதுதுதான் ஆளும் கட்சியின் சாதனை. இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். ஜான்குமார் பொருளாதார குற்றவாளி, ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரும் ஹெல்மெட் அணிவதை முதல்வர் நாராயணசாமி ஒரு சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கினார்.

 விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த ஹெல்மெட்டின் குத்தகைதாரர் ஜான்குமார். 5 லட்சம் ஹெல்மெட்டை 10 நாளில் விற்று தீர்த்தவர் ஜான்குமார். வடமாநிலத்தில் உள்ள விற்காத 5 லட்சம் ஹெல்மெட்டை விற்பதற்கு ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளனர். ஆளுனர் மீது பழியை போட்டு அந்த சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. ஜான்குமாரால் அரசுக்கு வரவேண்டிய ரூ.600 கோடி ஆட்சியாளர்களுக்கு திருப்பி விடப்பட்டது.  மக்கள் மனதில் மஹாராஜாவாக இருப்பவர் ரங்கசாமிதான். அதனால் இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி கட்சி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனாவிற்கு ஜக்கு சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: