தீயணைப்பு வாகன ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

புதுச்சேரி, அக். 10: புதுவை மாநில முஸ்லிம் லீக் (சிஏ கபூர்) கட்சி தலைவர் முகமது மூசா வெளியிட்டுள்ள அறிக்கையில், 13 தீயணைப்பு நிலையங்களில் மொத்தம் 56 தீயணைப்பு வாகன ஓட்டுனர்கள் பதவிகள் உள்ளன. இதில் பணி ஓய்வு காரணமாக மொத்தம் 19 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்த பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாக உள்ளது. தற்போதுள்ள ஓட்டுனர்களை கொண்டே தீயணைப்பு நிலையங்களில் 2 ஷிப்ட் அடிப்படையில் இயங்கி வருகின்றன. இதனால் வாகன ஓட்டுனர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. வார விடுமுறை, அவசர விடுப்பு, மருத்துவ விடுப்பு எடுக்க முடியாமல் உள்ளனர். எனவே, காலியாக உள்ள 19 ஓட்டுனர் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: