தேசப்பற்று தொடர்பாக ஆங்கில பேச்சு போட்டி

காரைக்கால், அக். 10:  மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், மாவட்ட அளவில் தேசப்பற்று என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் பேச்சு போட்டி நடத்த அந்தந்த பகுதி நேரு யுவகேந்திரா அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி காரைக்கால் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில், காரைக்காலில் தேசப்பற்று தொடர்பாக ஆங்கில பேச்சு போட்டி நடைபெற்றது. போட்டியை, மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பாரத் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் இருதயராஜ், நுகர்வோர் மற்றும் பெண்கள் பாதுகாப்புக் குழுத் தலைவர் பாரீஸ்ரவி, நேரு யுவகேந்திரா கணக்காளர் தவமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

போட்டியில் 18 வயதுக்கும் மேற்பட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில், ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 என 3 பரிசு மற்றும் சான்றிதழ்களை நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பாரத் வழங்கினார். இதை தொடர்ந்து நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பாரத் கூறுகையில், இந்த போட்டியில் முதல் மூன்று பரிசுகளை வென்ற மூவரும், புதுச்சேரி மாநில அளவில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்கலாம். அங்கு அவர்கள் வெற்றி பெறும்போது ரூ.25 ஆயிரம் பரிசு பெறமுடியும். மாநில அளவில் தேர்வானவர், புதுடெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள முடியும். இதில் தேர்வானால் ரூ.2 லட்சம் பரிசை, பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெறமுடியும் என்றார்.

Related Stories: