கலிதீர்த்தாள்குப்பம் அரசு பள்ளியில் என்சிசி துவக்கம்

திருபுவனை, அக். 10:  திருபுவனை அடுத்த கலிதீர்தாள்குப்பத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக தேசிய மாணவர் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடந்தது. கணித விரிவுரையாளர் நளினா வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் மாதவன், தலைமை ஆசிரியை குணசுந்தரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெருந்தலைவர் காமராசர் கலைக்கல்லூரியின் சுற்றுலாத்துறை தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி தேசிய மாணவர் படை கமாண்டிங் ஆபிசர் கர்னல் விநாயகம் கலந்து கொண்டு என்சிசி பிரிவை துவக்கி வைத்தார். தலைமை அதிகாரி சுப்ரமணியன் தலைமை உரையாற்றினார். ஹவில்தார் நாகராஜன் நோக்க உரையாற்றினார்.  என்சிசி பொறுப்பாளரான உடற்கல்வி ஆசிரியர் முருகன், என்சிசி துவக்கப்பட்டதன் அவசியம், அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. விரிவுரையாளர் அருள்ஜோதியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கணித ஆசிரியை அறிவழகி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பரத் தலைமையில் ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Related Stories: