விவசாய தொழிலாளி மர்மச்சாவு

ஒரத்தநாடு, அக். 9: ஒரத்தநாடு அருகே விவசாய தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரத்தநாடு அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கலியபெருமாள் (55). இவர் ஒரத்தநாட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான விவசாய பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பண்ணையில் உள்ள ஒரு வயலில் கலியபெருமாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடதுக்கு விரைந்து சென்று கலியபெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். இறந்த கலியபெருமாளுக்கு மாரியம்மாள் என்கிற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே மாரியம்மாள் தன் மகனுடன் கலியபெருமாளை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வசிக்கும் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் பகுதிக்கு சென்று விட்டார்.

Advertising
Advertising

Related Stories: