இலங்கையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் தாயிடம் நலம் விசாரித்த அதிகாரி

கிருஷ்ணகிரி, அக்.4: மெட்ராஸ் ரெஜ்மெண்ட் 5வது படைப்பிரிவில் கர்னல் நவீன்பன்சித், சுபேதார் மேஜர் பாபட்மிட்டிக்கி ஆகியோரது தலைமையில் கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி இலங்கையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமச்சந்திரன் வீர மரணமடைந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் எப்படி உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாயக் சுபேதார் ஸ்ரீகுமார், அவில்தார் தேவராஜ் ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். பின்னர், தானம்பட்டி கிராமத்திற்கு சென்று ராமச்சந்திரனின் தாயை சந்தித்தனர். அப்போது, அவருக்கு ஆறுதல் கூறியதுடன், உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும், பரிசு பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் உடனிருந்தனர்.

Related Stories: