திருபுவனையில் ஆக்கிரமிப்புகள் திடீர் அகற்றம்

திருபுவனை, அக். 4:  திருபுவனையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  

 திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் மக்களும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் குப்பன், ரமேஷ்குமார், வில்லியனூர் தாசில்தார் மகாதேவன் ஆகியோர் ேமற்பார்வையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, திருபுவனை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிந்த கட்டிடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது, அப்பகுதியில் இருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஆயுத பூஜை வரை எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஏற்கனவே உங்களுக்கு அவகாசம் தரப்பட்டு விட்டது. இனிமேல் தரமுடியாது என கூறி ஆக்கிரமிப்பு பணிகளை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. இதனிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என திருபுவனை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: