அசோகா காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் கரூர் கோல்டு பைனான்ஸ் திறப்பு விழா

கரூர்,அக். 4: கரூர் கோவை ரோட்டில் உள்ள அசோகா காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் கரூர் கோல்டு பைனான்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு நிர்வாக இயக்குனர் சந்தோஷ் வரவேற்றார். கரூர் கோல்டு பைனான்ஸ் தலைவர் தோகைமுருகன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் கரூர் ஆடிட்டர் நல்லுசாமி, சுப்பிரமணி, கவுதம், பாலுமகேந்திரன், குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக கோவை தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி அன்புநாதன், புஞ்சைபுகழூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்து பார்வையிட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சிறு குறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நிர்வாகி சகாதேவன் நன்றி கூறினார். கரூர் கோல்டு பைனான்ஸ் நிர்வாகி தோகைமுருகன் கூறியதாவது.

புதிதாக தொடங்கியுள்ள நிதி நிறுவனத்தில் விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் விவசாய கடன்களும், தனிநபர் கடன்களுக்கு ரூ.லட்சம் வரையிலும், தங்க நகை கடனாக ஒரு பவுனுக்கு ரூ.24ஆயிரமும், தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் தரமான தங்க ஆபரணங்கள் செய்து தரப்படும். மேலும் டெபாசிட்டுகள் பெறப்பட்டு குறுகிய கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் வைப்புநிதிகள் என செயல்படுத்தப்பட உள்ளன என்றார்.

Related Stories: