பெரும்புதூர், பிள்ளைபாக்கம் பகுதிகளில் ஏரி வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்

பெரும்புதூர், அக்.2: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பெரிய ஏரிகளான பிள்ளைபாக்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏரிகள் மழைக்காலத்தில் நிரம்பி, வரத்து கால்வாய்கள் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் போய் கலக்கும்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகளின் வரவு கால்வாய்கள் சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து வெளியேறும் கால்வாய்கள் மற்றும் பிள்ளைபாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும்  கால்வாய் சீரமைக்க, வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நிதி ₹20 லட்சத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடக்கிறது. இந்த பணியினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  உடன் உதவி பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Related Stories: