பஞ்சவடீ ஆஞ்சநேயருக்கு 1500 லிட்டர் பாலபிஷேகம்

புதுச்சேரி, அக். 2: புதுச்சேரி- திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடீ கோயிலில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு மாதந்தோறும் மூலநட்சத்திரத்தன்றும், ஆங்கில மாதம் முதல் ஞாயிற்று கிழமையிலும் மாலை 4 மணிக்கு பாலாபிஷேக திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 5ம் தேதி ஆஞ்சநேய சுவாமியின் ஜென்ம நட்சத்திரமான மூலநட்சத்திரம் வருகிறது. அன்றைய தினம், மூல நட்சத்திரமும், புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானது. இந்த மூலம் நட்சத்திரமானது 30 ஆண்டுகளுக்குப்பிறகு 5ம் தேதி தான் வருகிறது.

இந்த நாளில் மூலநட்சத்திர பாலபிஷேக திருமஞ்சனமும், ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருமஞ்சனமும் சேர்த்து காலை 7.30க்கு ஆஞ்சநேயசுவாமிக்கு 1500 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. பாலபிஷேக திருமஞ்சனம் முடிந்தவுடன் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

Related Stories: