பவ்டா நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

கடலூர், அக். 2:பவ்டா தொண்டு நிறுவனத்தின் 35வது ஆண்டு தொடக்கத்தையொட்டி 35 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று 2ம் தேதி தொடங்கப்படுகிறது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் ஜாஸ்லின் தம்பி கூறியதாவது:பவ்டா தொண்டு நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது.  இன்று 2ம் தேதி 35வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நிறுவனம், பவ்டா பசுமை பாதையை நோக்கி என்னும் திட்டத்தை தொடங்குகிறது.

அதன்படி 35 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதியான இன்று 4 மாநிலங்களிலும், 15 மாவட்டங்களிலும் உள்ள பவ்டா கிளைகளிலும், பவ்டா தலைமை அலுவலகங்களிலும், பவ்டா கல்வி நிறுவனங்களும் இணைந்து ஒவ்வொரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்திலுள்ள மக்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இத்திட்டத்தில் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பவ்டா நிறுவனத்துடன் இணைந்து மரக்கன்றுகள் கொடுத்தும், மரக்கன்றுகள் நடவு செய்தும், பராமரிக்கவும் முன் வரலாம், என்றார்.

Related Stories: